கோண்டியாவில் புலி தாக்கி ஒருவர் பலி


கோண்டியாவில் புலி தாக்கி ஒருவர் பலி
x
தினத்தந்தி 22 Sep 2022 10:15 PM GMT (Updated: 2022-09-23T03:46:04+05:30)

கோண்டியா மாவட்டம் அர்ஜூனி மோர்காவ் தாலகுா அருண்நகர் பகுதியில் புலி தாக்கி ஒருவர் பலி

கோண்டியா,

கோண்டியா மாவட்டம் அர்ஜூனி மோர்காவ் தாலகுா அருண்நகர் பகுதியை சேர்ந்தவர் வினய் மண்டல் (வயது45). கடந்த 20-ந்தேதி விறகு சேகரிக்க காட்டுக்கு சென்றார். இதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டுக்குள் சென்று தேடினர். லக்காந்தூர் வனப்பகுதியில் பாதி உடல் கடித்து குதறப்பட்ட நிலையில் வினய் மண்டல் பிணமாக கிடந்ததை மீட்டனர். உடலின் அருகே புலியின் காலடிதடம் இருந்ததால் புலி தாக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story