முதல்-மந்திரி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி


முதல்-மந்திரி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.

தானே,

தானே அருகே திவாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பங்கேற்றார். விழாவில் முதல்-மந்திரி மகனும், கல்யாண் தொகுதி எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவும் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கலந்துகொண்ட விஸ்வகர்மா (வயது55) என்பவர் அங்கு கிடந்த மின்வயரை தவறுதலாக மிதித்து விட்டார். இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு கல்வாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story