சிறுவன் முன் தகாத செயலில் ஈடுபட்ட முதியவருக்கு ஒரு ஆண்டு ஜெயில்- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சிறுவன் முன் தகாத செயலில் ஈடுபட்ட முதியவருக்கு ஒரு ஆண்டு ஜெயில்- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x

ிறுவன் முன் தகாத செயலில் ஈடுபட்ட முதியவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

சிறுவன் முன் தகாத செயலில் ஈடுபட்ட முதியவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

சிறுவன் முன் தகாத செயல்

மும்பையை சோ்ந்த 4 வயது சிறுவன் சம்பவத்தன்று வீட்டருகே நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது, அந்த பகுதியில் உள்ள டெய்லர் கடையில் 60 வயது முதியவர் தகாத செயலில் ஈடுபட்டு கொண்டு இருந்ததை சிறுவன் பார்த்து உள்ளான். இதுதொடர்பாக சிறுவன் பெற்றோரிடம் கூறினான். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பிரியா பேங்கர் முன் நடந்தது. அப்போது முதியவர் சார்பில் ஆஜரான வக்கீல், "குற்றம்சாட்டப்பட்டவர் சிறுவனை கடைக்குள் அழைக்கவில்லை, சிறுவன் அருகில் அவர் போகவுமில்லை" என்றார்.

பாலியல் நோக்கம்

எனினும் இதை ஏற்க மறுத்த நீதிபதி அவரது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சிறுவன், முதியவரை தற்செயலாக பார்த்தது உண்மைதான். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவரின் கடை சிறியது. ரோட்டில் நடந்து செல்லும் யாரும் உள்ளே பார்க்க முடியும். எனவே அவா் தனிமையில் தகாத செயலில் ஈடுபட்டார் என கூற முடியாது. சிறுவன் பார்த்த போது அவர் தகாத செயலை நிறுத்தவில்லை. அவனுக்கு விளக்கம் கொடுக்க முயற்சி செய்து உள்ளார். சுயஇன்பம் பாலியல் செயல்.

மற்றொருவர் முன் அதுபோல நடந்து கொள்வது, பாலியல் நோக்கத்தோடு தான் செய்யப்படுகிறது. இது போன்ற சம்பவம் சிறுவன், அவனது குடும்பம், சமூகத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வீடு மற்றும் வீடு அருகே குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவம் கண்டிப்பாக மக்களின் மனதில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும். சிறுவனின் மனதில் நீண்ட காலத்தில் அச்ச உணர்வு இருக்கும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழக்கில் முதியவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு கூறினார்.

1 More update

Next Story