அதானி விவகாரத்தில் சரத்பவாரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் செவிசாய்க்க வேண்டும்- ஷிண்டே வலியுறுத்தல்

அதானி விவகாரத்தில் சரத்பவாரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் செவிசாய்க்க வேண்டும் என முதல்-மந்திரி ஷிண்டே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அதானி நிறுவன விவகாரத்தில் ராகுல்காந்திக்கு எதிரான கருத்தை தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்து கூறியதாவது:-
அதானி குழுமத்தின் ரூ.20 ஆயிரம் கோடி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரேவும் தொடர்ந்து பேசினார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சரத்பவார் கருத்து கூறியுள்ளார். எனவே போராட்டம் நடத்தியவர்கள் அவரின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும். சரத்பவார் மூத்த அரசியல்வாதி. நன்றாக ஆய்வு செய்த பிறகு தான் அவர் அதானி விவகாரம் குறித்து பேசியிருப்பார். எனவே அதானி விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






