சோளக்காட்டு பொம்மைகளுடன் எதிர்க்கட்சியினர் நூதன போராட்டம்


சோளக்காட்டு பொம்மைகளுடன் எதிர்க்கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை கண்டித்து சட்டசபையில் எதிர்க்கட்சியினர் சோளக்காட்டு பொம்மைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை கண்டித்து சட்டசபையில் எதிர்க்கட்சியினர் சோளக்காட்டு பொம்மைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள் போராட்டம்

மராட்டிய குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று நடந்த கடைசி நாள் கூட்டத்தின் போதும் மாநில அரசை கண்டித்து எதிர்க்கட்சியான மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பல்வேறு விவகாரங்களில் மாநில அரசை கண்டித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் அரசுக்கு எதிரான கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

சோளக்காட்டு பொம்மைகள்

குறிப்பாக சத்ரபதி சிவாஜி பற்றி அவதூறாக பேசிய கவர்னர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை பயனில்லாத சோளக்காட்டு பொம்மைகள் என விமர்சித்தனர். மேலும் அவர்கள் சோளக்காட்டு பொம்மைகளுடன் சட்டசபையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமேல் சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தான்வே கூறுகையில், "பயிர்களை பாதுகாக்க விவசாய நிலங்களில் சோளக்காட்டு பொம்மை வைக்கப்படும்.

இந்த மாநிலத்துக்கும் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி என 2 சோளக்காட்டு பொம்மைகள் உள்ளன. மாநில மந்திரிகளின் ஊழலை அம்பலப்படுத்திய போதும் மாநில அரசு மவுனமாக உள்ளது" என்றார்.

போராட்டத்துக்கு பிறகு மகாவிகாஸ் அகாடி எம்.எல்.ஏ.க்கள் சோளக்காட்டு பொம்மைகளை எட்டி உதைத்துவிட்டு சென்றனர். போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார், காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே, வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story