ஓசிப்பயணிகளிடம் ரூ.239 கோடி அபராதம் வசூல்

மத்திய ரெயில்வே கடந்த 9 மாதங்களில் மட்டும் டிக்கெட் இல்லாமல் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.238 கோடியே 72 லட்சம் அபராதம் வசூலிக்க உள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வே கடந்த 9 மாதங்களில் மட்டும் டிக்கெட் இல்லாமல் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.238 கோடியே 72 லட்சம் அபராதம் வசூலிக்க உள்ளது.
ரூ.238.72 கோடி அபராதம்
மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினமும் 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதேபோல விரைவு ரெயில்களிலும் அதிகளவில் மக்கள் பயணம் செய்கின்றனர். இதில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளால் ரெயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும் மத்திய ரெயில்வே அபராத தொகை மூலம் கடந்த 9 மாதங்களில் அதிக வருவாயை ஈட்டி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை மத்திய ரெயில்வேயில் 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.238 கோடியே 72 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 63.46 சதவீதம் அதிகம். கடந்த முறை ரூ.146.04 கோடி வசூலாகி இருந்தது.
இதுவரை இல்லாத வருவாய்
இதேபோல தற்போது கிடைத்துரூ.239 கோடிள்ள ரூ.238 கோடியே 72 லட்சம் ரெயில்வேயில் இதுவரை கிடைத்த அபராத வருவாயில் அதிகம் ஆகும். கடந்த நிதியாண்டு முழுவதும் மத்திய ரெயில்வே டிக்கெட் இல்லாத பயணிகள் மூலம் ரூ.214.14 கோடி வருவாய் ஈட்டி இருந்தது. இந்த தொகையை விட கடந்த 9 மாதங்களில் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






