ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான சுரஜ் சவானிடம் போலீசார் மீண்டும் விசாரணை

ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான சுரஜ் சவானிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
மும்பை,
ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான சுரஜ் சவானிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
சிகிச்சை மைய முறைகேடு
கொரோனா பரவலின் போது சிகிச்சை மையங்கள் அமைத்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி நிர்வாகி சுரஜ் சவானிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது. இதேபோல கொரோனா பரவலின் போது மாநகராட்சி சார்பில் விடப்பட்ட ஒப்பந்த பணிகள் வழங்குவதில் நடந்த முறைகேடுகள் குறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் சுரஜ் சவானிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தி இருந்தனர்.
மீண்டும் விசாரணை
இந்தநிலையில் கொரோனா பரவலின் போது மும்பையில் சிக்கி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு (கிச்சடி) வழங்கியதில் நடந்த முறைகேடு புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சுரஜ் சவானிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்காக அவர் நேற்று காலை 11.45 மணியளவில் தென்மும்பையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.






