முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தம்பி மீது போலீசில் புகார்


முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தம்பி மீது போலீசில் புகார்
x

முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை,

மும்பை குர்லா பகுதியில் உள்ள சுமார் 80 சட்டவிரோத கட்டிடங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் வினோத் சன்காம்பளே மாநகராட்சியில் புகார் அளித்தார். இந்த சட்டவிரோத கட்டிடங்கள் குலாம் முஸ்தபா மாலிக் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. மேலும் அவர் முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கின் தம்பி இக்பால் மாலிக்கிற்கு தெரிந்தவர் எனவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 25-ந் தேதி குர்லா பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உத்தரவிட்டது. எனவே மறுநாள் (26-ந் தேதி) வினோத் சன்காம்பளே குர்லாவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு இக்பால் மாலிக், சட்டவிரோத கட்டிடங்கள் குறித்து பிரச்சினை செய்ய கூடாது என வினோத் சன்காம்ளேயை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மும்பை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனரிடம் புகார் அளித்து உள்ளார். புகார் குறித்து இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என குர்லா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே வினோத் சன்காம்ளேவின் குற்றச்சாட்டை இக்பால் மாலிக் மறுத்து உள்ளார். வினோத் சன்காம்ளேவின் குற்றச்சாட்டு ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டு என கூறியுள்ளார்.


Next Story