ரூ.350 லஞ்ச வழக்கில் 24 ஆண்டுக்கு பிறகு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விடுதலை- ஐகோர்ட்டு உத்தரவு


ரூ.350 லஞ்ச வழக்கில் 24 ஆண்டுக்கு பிறகு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விடுதலை- ஐகோர்ட்டு உத்தரவு
x

ரூ.350 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஆதாரம் இல்லாததால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை 24 ஆண்டுகளுக்கு பிறகு ஐகோர்ட்டு விடுவித்தது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

ரூ.350 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஆதாரம் இல்லாததால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை 24 ஆண்டுகளுக்கு பிறகு ஐகோர்ட்டு விடுவித்தது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

நாசிக் ஏவ்லா தாலுகா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் தாமு அவுகட். கடந்த 1988-ம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஜாமீன் ஏற்பாடு செய்வதாக கூறி ரூ.350-ஐ லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக லஞ்சம்- ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் விசாரணை நிறைவடைந்து அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

வழக்கில் விடுதலை

கோர்ட்டில் நீதிபதி பிஷட் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. வழக்கின் விசாரணையின் போது அரசு தரப்பில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமு அவுகட் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை.

இதனால் 24 ஆண்டாக கிடப்பில் கிடந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர் தாமு அவுகட்டை விடுதலை செய்து நீதிபதி உத்தவிட்டார்.

மேலும் நீதிபதி தனது உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து லஞ்சபணத்தை மீட்டு எடுப்பது மட்டும் போதாது. குற்றத்தை உறுதிப்படுத்த போதிய ஆதாரம் வேண்டும். இந்த ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தெரிவித்தார்.Next Story