வங்கதேச சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது


வங்கதேச சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வங்கதேச சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

புனே,

வங்கதேச சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி பலாத்காரம்

சாங்கிலி பகுதியில் ஒரு பெண்ணுடன் 17 வயது சிறுமி வசித்து வந்தாள். இந்த சிறுமி வங்கதேச நாட்டை சேர்ந்தவள். சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் விஷ்ரம்பாக் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் விசாரணை நடத்துவதாக கூறி சிறுமியை 2 தடவை பலாத்காரம் செய்து உள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்து ரூ.2 லட்சமும், அடைக்கலம் கொடுத்த பெண்ணிடம் ரூ.5 லட்சமும் பெற்றதாக தெரிகிறது.

பணி இடைநீக்கம்

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை போலீஸ்காரர் பலாத்காரம் செய்த சம்பவம் உறுதியானது. இது குறித்து போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாங்கிலி போலீஸ் சூப்பிரண்டு பசவராஜிடம் பரிந்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ்காரரை பணி இடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

மேலும் போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story