மும்பை- நாக்பூர் விரைவு சாலையை பிரதமர் மோடி 11-ந் தேதி திறந்து வைக்கிறார்

மும்பை- நாக்பூர் விரைவு சாலையை பிரதமர் மோடி 11-ந் தேதி திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)

மும்பை - நாக்பூர் இடையே அமைக்கப்பட்டு வரும் விரைவு சாலையில் நாக்பூர் - ஷீரடி இடையிலான 520 கி.மீ. சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த சாலையை வருகிற 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மும்பை,

மும்பை - நாக்பூர் இடையே அமைக்கப்பட்டு வரும் விரைவு சாலையில் நாக்பூர் - ஷீரடி இடையிலான 520 கி.மீ. சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த சாலையை வருகிற 11-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மும்பை- நாக்பூர் விரைவு சாலை

மும்பை - நாக்பூர் இடையே 701 கி.மீ. நீளத்துக்கு பால்தாக்கரே மகாராஷ்டிரா சாம்ருத்தி மகாமார்க் 6 வழி விரைவு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் இந்த சாலை மும்பை - நாக்பூர் இடையே நாக்பூர், வார்தா, அமராவதி, வாசிம், புல்தானா, ஜல்னா, அவுரங்காபாத், நாசிக், அகமதுநகர், தானே ஆகிய 10 மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

மேலும் சந்திராப்பூர், பண்டாரா, கோண்டியா, கட்சிரோலி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் இந்த சாலையால் பயனடைகின்றன.

மோடி திறந்து வைக்கிறார்

இந்தநிலையில் நாக்பூர் - மும்பை விரைவு சாலை திட்டத்தில் முதல் கட்டமாக நாக்பூர் - ஷீரடி இடையே 520 கி.மீ.க்கு சாலை அமைக்கும் பணிகள் முடிந்து உள்ளன. இது பொது மக்களுக்காக வருகிற 11-ந் தேதி திறந்து வைக்கப்படுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய சாலையை மக்களுக்கு அர்பணிக்கிறார்.

இதேபோல 11-ந் தேதி மெட்ரோ ரெயில் சேவையும் தொடங்கி வைக்கப்படுகிறது. அந்த விழாவிலும் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மராட்டிய குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. மேலும் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. இந்தநிலையில் பிரதமர் மோடியின் மராட்டிய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Next Story