புனே எரவாடா சிறையில் கைதிகள் நெரிசல்


புனே எரவாடா சிறையில் கைதிகள் நெரிசல்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புனே எரவாடா சிறை கைதிகள் நெரிசலால் அல்லல்படுகிறது. சுமார் 2,500 கைதிகள் அடைக்கப்பட வேண்டிய இடத்தில் 6,800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

புனே,

புனே எரவாடா சிறை கைதிகள் நெரிசலால் அல்லல்படுகிறது. சுமார் 2,500 கைதிகள் அடைக்கப்பட வேண்டிய இடத்தில் 6,800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறையில் நெரிசல்

மராட்டியத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அதன் திறனை தாண்டி அதிக கைதிகள் அடைந்து வைக்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்பட மொத்தம் 60 சிறைகள் உள்ளன. இந்த சிறைச்சாலைகளில் மொத்தம் 24 ஆயிரத்து 722 பேர் வரை அடைந்து வைக்க முடியும். ஆனால் 2022-ம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி சுமார் 40 ஆயிரத்து 718 பேர் அடைந்து வைக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக 2 ஆயிரத்து 449 பேரை அடைந்து வைக்க இடவசதி உள்ள புனே எரவாடா சிறையில் 6 ஆயிரத்து 854 கைதிகள் அடைந்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் எரவாடா சிறைச்சாலை கைதிகளின் நெரிசலால் சிக்கி தவிக்கிறது.

சிறையில் கூடுதல் அறைகள்

இந்த நிலையில் மகர சங்கராந்தியையொட்டி சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி புனேயில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அமிதாப் குப்தா கலந்துகொண்டு பேசுகையில், "எரவாடா சிறையில் கூடுதல் அறைகள் கட்டுவதற்கான கோரிக்கை சில நாட்களுக்கு முன்பு மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர மேலும் பல சிறைச்சாலைகள் தேவை. அரசும் இதற்காக தீவிரம் காட்டி வருகிறது" என்றார்.

1 More update

Next Story