ஆரே காலனியில் மெட்ரோ பணிமனைக்கு எதிர்ப்பு- அனுமன் பஜனை பாடி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

ஆரே காலனியில் மெட்ரோ பணிமனைக்கு எதிர்ப்பு- அனுமன் பஜனை பாடி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
x

கடவுள் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியினர் ஆரே காலனியில் அனுமன் பஜனை பாடி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

கடவுள் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியினர் ஆரே காலனியில் அனுமன் பஜனை பாடி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரேகாலனியில் பணிமனை

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பையும் மீறி தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருந்த போது ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட திட்டமிடப்பட்டது. எனினும் 2019-ல் சிவசேனா ஆட்சிக்கு வந்தவுடன் ஆரேகாலனியில் அமைய இருந்த மெட்ரோ பணிமனையை காஞ்சூர்மாா்க்கிற்கு மாற்றியது. இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார். தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்தநிலையில் பதவி ஏற்ற முதல் நாளே மாநில மெட்ரோ பணிமனையை மீண்டும் ஆரேகாலனிக்கு மாற்றும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியது.

அனுமன் பஜனை

இந்தநிலையில் ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஆம் ஆத்மி கட்சியினர் ஆரே காலனியில் அமைதி போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது ஆம் ஆத்மி மும்பை தலைவர் பிரீத்தி மேனன், கட்சியினர் அனுமன் பஜனை பாடினா்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மும்பையின் பசுமை நுரையீரலை அழிக்க விரும்பும் தேவேந்திர பட்னாவிசுக்கும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என அனுமனிடம் பிரார்த்தனை செய்தோம்" என்றார்.

1 More update

Next Story