12, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

12,10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை,
12,10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு
மராட்டியத்தில் 12, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாநில கல்வி வாரியம் நடத்தி வருகிறது. மாநிலத்தில் ஆண்டு தோறும் 12-ம் வகுப்பு தேர்வை சுமார் 14 லட்சம் மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வை 17 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும் எழுதுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக முழுமையான பாடத்திட்டத்துடன் தேர்வுகள் நடைபெறவில்லை.
2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு முழுமையான பாடத்திட்டத்துடன், கூடுதல் நேரம் வழங்கப்படாமல் பொது தேர்வு நடைபெற உள்ளது.
பிப்ரவரியில் தொடங்குகிறது
இந்தநிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வு கால அட்டவணையை மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21-ந் தேதி தொடங்கி மார்ச் 21-ந் தேதி வரை நடக்கிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை, மதியம் நடக்கிறது. காலையில் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மதியம் நடைபெறும் தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.






