பெண்ணை பலாத்காரம் செய்து ரூ.15 லட்சம் மோசடி


பெண்ணை பலாத்காரம் செய்து ரூ.15 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 4 Aug 2023 12:30 AM IST (Updated: 4 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மும்பை முல்லுண்டை சேர்ந்த 31 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கவுரவ் தாண்டே (வயது47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவர் வாக்குறுதி அளித்தார். இதனை நம்பிய பெண்ணை பல சந்தர்ப்பங்களில் பலாத்காரம் செய்தார். கடந்த 3 ஆண்டாக அப்பெண்ணிடம் கடனாக ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் பெற்று இருந்தார். திருமணத்திற்கு அப்பெண் வற்புறுத்திய நிலையில் கவுரவ் தாண்டே மறுத்து உள்ளார். மேலும் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண் போலீசில் புகார் அளித்தார். புகார் பற்றி அறிந்த கவுரவ் தாண்டே தலைமறைவாகி விட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story