சாலையோரம் வசித்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

மும்பை,
நவிமும்பை சான்பாடா ரெயில்வே பாலம் அருகே ஆதரவற்ற 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவளுக்கு அதே பகுதியை சேர்ந்த ஆர்வி(வயது21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்தார். பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டு தலைமறைவானார். இது பற்றி சிறுமி வாஷி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆர்வியை தேடி வந்தனர். இந்தநிலையில் சொந்த ஊரான வார்தாவிற்கு அவர் தப்பி சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் ஆர்வி நேற்று முன்தினம் ஊரில் இருந்து வந்து இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அங்கிருந்த அவரை பிடித்து கைது செய்தனர்.
Next Story






