புனேயில் ரூ.3 கோடி போதைப்பொருள் பறிமுதல்


புனேயில் ரூ.3 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புனே,

புனே நகரில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் உள்பட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய 76 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி புனே போலீஸ் கமிஷனர் அமிதாப்குப்தா கூறியதாவது:-

கடந்த 10 மாதங்களில் போதைத்தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 76 பேர் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 92 லட்சத்து 12 ஆயிரத்து 480 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story