புனேயில் ரூ.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்; 5 பேர் கைது

புனேயில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர்.
புனே,
புனேயில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர்.
ரூ.50 கோடி போதைப்பொருள்
வெளிமாநிலத்தில் இருந்து மராட்டியத்துக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குனரக (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் போில் சம்பவத்தன்று டி.ஆர்.ஐ. அதிகாாிகள் புனேயில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தெலுங்கானா மாநில பதிவெண்ணுடன் வந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை நடத்தினர். சோதனையின் போது காரில் வெள்ளை நிற பொருள் பிளாஸ்டிக் கண்டெய்னரில் இருந்தது. அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது மெத்தகுலோன் என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.50.65 கோடி மதிப்பிலான 101.31 கிலோ தடைசெய்யப்பட்ட மெத்தகுலோனை பறிமுதல் செய்தனர்.
5 பேர் கைது
மேலும் அதை கடத்தி வந்த தெலுங்கானா, மராட்டியம், டெல்லி, அரியானாவை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாட்டு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறினார்.






