தொழில் அதிபர் வீட்டில் கள்ளச்சாவி போட்டு ரூ.54 லட்சம் நகை, பணம் கொள்ளை- டிரைவர்-, காவலாளி கைது


தொழில் அதிபர் வீட்டில் கள்ளச்சாவி போட்டு ரூ.54 லட்சம் நகை, பணம் கொள்ளை- டிரைவர்-, காவலாளி கைது
x

வேலை பார்த்த தொழிலதிபர் வீட்டில் கள்ளச்சாவியை பயன்படுத்தி ரூ.54 லட்சம் நகைகள், பணத்தை கொள்ளை அடித்த டிரைவர், காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

வேலை பார்த்த தொழிலதிபர் வீட்டில் கள்ளச்சாவியை பயன்படுத்தி ரூ.54 லட்சம் நகைகள், பணத்தை கொள்ளை அடித்த டிரைவர், காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

நகைகள் கொள்ளை

மும்பை வில்லேபார்லே மேற்கு ஜூகு ஜிம்கானா பகுதியில் 68 வயது தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி பழம் வாங்க மார்க்கெட்டிற்கு செல்ல வீட்டை பூட்டி விட்டு சென்றார். இதன்பின்னர் வீடு திரும்பிய போது பீரோவில் இருந்த ரூ.54 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொழிலதிபரிடம் கடந்த ஆண்டு டிரைவராக வேலை பார்த்து வந்து சதீஷ் சிக்வன்(வயது34) என்பவர் தான் கூட்டாளியுடன் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளை அடித்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார் நாலாச்சோப்ராவில் பதுங்கி இருந்த அவரை பிடித்து கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில், வேலை பார்த்த சமயத்தில் வீட்டு பூட்டின் மாற்றுச்சாவி தயாரித்து வைத்திருந்தார். வேலையை விட்டு விலகிய பின்னர் அந்தேரியை சேர்ந்த காவலாளி அங்குஷ் மோண்டே (38) என்பவர் உதவியுடன் வீட்டில் புகுந்து கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 28-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story