ரூ.5.89 லட்சம் நகைகளை திருடிய 2 பெண்களுக்கு வலைவீச்சு

தானே,
மும்ரா பகுதியை சேர்ந்தவர் லலித்குமார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் 2 பெண்கள் குழந்தையுடன் நகைகள் வாங்க இவரது கடைக்கு வந்தனர். அப்போது, லலித்குமார் 72 தங்க காதணிகள் அடங்கிய நகைப்பெட்டியை எடுத்து பெண்களிடம் காண்பித்தார். இதில் ஒரு பெண் லலித்குமாரிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசைதிருப்பினார். இந்த சந்தர்ப்பத்ைத பயன்படுத்தி ஒருபெண் நகைப்பெட்டியில் இருந்த நகைகளை அபேஸ் செய்து உள்ளார். பின்னர் நகைகள் வாங்காமல் அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர். இதன்பின்னர் நகைகளை சோதனை நடத்திய போது ரூ.5 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை மாயமானது தெரியவந்தது. இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
Next Story






