விமான நிலையத்தில் ரூ.1.90 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்


விமான நிலையத்தில் ரூ.1.90 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் பயணிகளின் உடமைகளில் சோதனை நடத்தினர். இதன்பலனாக வெளிநாட்டில் இருந்து உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களில் இந்தியா மற்றும் நேபாள பயணிகளும் அடங்குவர். இவர்கள் உடமைகளிலும், உடலில் அணியும் பொருட்களிலும் மறைத்து வைத்து சுமார் 3½ கிலோ தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்தனர். இந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 90 லட்சம் ஆகும். பிடிபட்டவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story