சஞ்சய் ராவத் கைது நடவடிக்கை: கவர்னரின் சர்ச்சையில் இருந்து திசை திருப்பும் முயற்சி- சிவசேனா எம்.பி. குற்றச்சாட்டு

சஞ்சய் ராவத் கைது நடவடிக்கை, கவர்னரின் சர்ச்சை பேச்சை திசை திருப்பும் முயற்சி என சிவசேனா எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
மும்பை,
குடிசை சீரமைப்பு திட்டம் தொடர்பான பண மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். இது மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் கூறியதாவது:-
பா.ஜனதா மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் சஞ்சய் ராவத்தை கைது செய்ததற்கு எதிராக மாநிலம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தப்படும். கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மும்பை பற்றி கூறி சர்ச்சையில் சிக்கியதை திசை திருப்பவே அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. இந்த திசை திருப்பும் செயலை புரிந்துகொள்ளாத முட்டாள்கள் நாங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






