மகாவிகாஸ் அகாடி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்பார்- சஞ்சய் ராவத் தகவல்


மகாவிகாஸ் அகாடி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்பார்- சஞ்சய் ராவத் தகவல்
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் நடைபெற உள்ள மகாவிகாஸ் அகாடி பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வார் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

நாக்பூரில் நடைபெற உள்ள மகாவிகாஸ் அகாடி பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வார் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரே பங்கேற்பு

நாக்பூரில் நாளை மகாவிகாஸ் கூட்டணியின் 'வஜ்ரமுத்' பொது கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாக்பூரில் நடைபெற உள்ள மகாவிகாஸ் கூட்டணி பொது கூட்டத்தில் உத்தவ்தாக்கரே கலந்து கொள்வார் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

கூட்டத்தை தடுக்க முயற்சி

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நாக்பூரில் நடைபெற உள்ள மகாவிகாஸ் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வார். நாக்பூரில் பொதுக்கூட்டம் நடைபெறுவதை தடுக்க அரசு மற்றும் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். எல்லா தடைகளையும் தாண்டி உரிய அனுமதியுடன் கூட்டம் நடைபெறும்.

நீங்கள் (பா.ஜனதா) கூட்டத்தை தடுக்க முயற்சி செய்தால், உங்கள் சொந்த இடங்களில் எங்களை பார்த்து பயப்படுகிறீர்கள் என்று அர்த்தம்" என்றார்.

1 More update

Next Story