சீவுட்ஸ்- உரன் இடையே விரைவில் ரெயில் சேவை தொடங்கப்படும் - ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தான்வே தகவல்


சீவுட்ஸ்- உரன் இடையே விரைவில் ரெயில் சேவை தொடங்கப்படும் - ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தான்வே தகவல்
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீவுட்ஸ் - உரன் இடையே விரைவில் ரெயில் சேவை தொடங்கப்படும் என ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தான்வே கூறியுள்ளார்.

மும்பை,

சீவுட்ஸ் - உரன் இடையே விரைவில் ரெயில் சேவை தொடங்கப்படும் என ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தான்வே கூறியுள்ளார்.

சீவுட்ஸ் - உரன் ரெயில் திட்டம்

மும்பை பெருநகரில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர்நாடியாக உள்ளது. இதில் சீவுட்ஸ்-கார்கோபர்-உரன் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி நீண்ட காலமாக நடந்து வருகிறது. சீவுட்ஸ்-கார்கோபர் இடையே தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் கார்கோபர்-உரன் இடையே 14.3 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்த நிலையிலும் ரெயில் சேவை தொடங்கப்படாமல் உள்ளது. கார்கோபர்-உரன் இடையே கவன்பாடா, ரஞ்சன்பாடா, நவசேவா, துரோநகரி, ஆகிய ரெயில் நிலையங்கள் அமைந்து உள்ளது. நவசேவா துறைமுகம், நவிமும்பை விமான நிலையத்தை இணைப்பதால் இந்த ரெயில்பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கார்கோபர்-உரன் ரெயில்பாதையில் 2 பெரிய பாலங்கள், 41 சிறிய பாலங்கள், 4 சுரங்க பாலம், 4 மேம்பாலம் அமைந்து உள்ளது.

10 நாளில் தொடங்கப்படும்

சீவுட்ஸ்- உரன் இடையே ரெயில் சேவை தொடங்குவது குறித்து ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தான்வே கூறியதாவது:- அடுத்த 8 முதல் 10 நாளில் உரன் வரை ரெயில் சேவை நீட்டிக்கப்படும். சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து ஜனவரி மாதம், புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story