வாழும் காலம் வரை சரத்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க மாட்டார் - சஞ்சய் ராவத் நம்பிக்கை

சரத்பவார் வாழும் காலம் வரை பா.ஜனதாவுடன் கைகோர்க்க மாட்டார் என்று சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.
மும்பை,
சரத்பவார் வாழும் காலம் வரை பா.ஜனதாவுடன் கைகோர்க்க மாட்டார் என்று சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.
ரகசிய சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ள நிலையில் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், துணை முதல்-மந்திரி அஜித்பவார் நடத்திய ரகசிய சந்திப்பு பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது. சரத்பவார் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவார்
இதுகுறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், "தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது வாழ்நாள் முழுவதும் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் தனது கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவார்" என்றார். மேலும் இந்த சந்திப்பின்போது சரத்பவாருக்கு, அஜித்பவார் பெரிய சலுகை ஏதாவது அளித்தாரா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "சரத்பவாருக்கு சலுகை அளிக்கும் அளவுக்கு அஜித்பவார் எப்போது பெரிய மனிதர் ஆனார்?. அஜித்பவாரை உருவாக்கியதே சரத்பவார் தான். சரத்பவார் 4 முறை மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளார். பலமுறை மத்திய மந்திரியாக பணியாற்றி உள்ளார்" என்றார்.






