ஷிண்டே அணியை சேர்ந்த மந்திரி உதய் சாமந்த், யஷ்வந்த் ஜாதவ் சிவசேனாவில் இருந்து நீக்கம்- உத்தவ் தாக்கரே நடவடிக்கை

ஷிண்டேயை அணியை சேர்ந்த மந்திரி உதய் சாமந்த், முன்னாள் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் ஜாதவை உத்தவ் தாக்கரே சிவசேனாவில் இருந்து நீக்கி உள்ளார்.
மும்பை,
ஷிண்டேயை அணியை சேர்ந்த மந்திரி உதய் சாமந்த், முன்னாள் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் ஜாதவை உத்தவ் தாக்கரே சிவசேனாவில் இருந்து நீக்கி உள்ளார்.
உதய் சாமந்த் நீக்கம்
சிவசேனா கடந்த ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. கட்சி உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி என பிரிந்து உள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்தவர்களை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். இந்தநிலையில் அவர் இன்று தற்போது ஏக்நாத் ஷிண்டே அரசில் தொழில்துறை மந்திரியாக உள்ள உதய் சாமந்தை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.
உதய் சாமந்த் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில் உயர்கல்விதுறை மந்திரியாக இருந்தார். சிவசேனா உடைந்த போது கடைசி ஆளாக தனிவிமானம் மூலம் கவுகாத்திக்கு சென்று ஷிண்டே அணியில் சேர்ந்தவர் ஆவார்.
மாநகராட்சி நிலை குழு தலைவர்
இதேபோல மும்பை மாநகராட்சி முன்னாள் நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் ஜாதவையும் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து நீக்க உள்ளார். யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் கட்சி உடைந்தவுடன் அவரது மனைவி யாமினி ஜாதவும், யஷ்வந்த் ஜாதவும் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
----






