அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும்-சிவசேனா சட்ட ஆலோசகர் தகவல்


அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும்-சிவசேனா சட்ட ஆலோசகர் தகவல்
x

3-ல் 2 பங்கு இருந்தாலும், வேறு கட்சியில் இணையும் வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும் என சிவசேனா சட்ட ஆலோசகர் கூறியுள்ளார்

மாவட்ட செய்திகள்

மும்பை,

3-ல் 2 பங்கு இருந்தாலும், வேறு கட்சியில் இணையும் வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும் என சிவசேனா சட்ட ஆலோசகர் கூறியுள்ளார்

சிவசேனா தீவிரம்

மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக திரும்பி அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். இந்தநிலையில் சிவசேனா 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளது. இதில் தகுதி நீக்கம் தொடர்பாக சட்டசபை துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்தநிலையில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய அனைத்து வகையான சட்டநடவடிக்கைகளையும் சிவசேனா தீவிரப்படுத்தி உள்ளது. இதுகுறித்த தகவலை அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அரவிந்த் சாவந்த் கூறினார்.

வேறு கட்சியில் இணையும் வரை...

மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சிவசேனா சட்ட ஆலோசகர் தேவ்தத் காமத் கூறியதாவது:-

மராட்டிய சட்டசபையில் சபாநாயகர் பதவி காலியாக இருப்பதால், துணை சபாநாயகருக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது. அரசியல் அமைப்பு பிரிவு 10-ன் 2.1.ஏ. சரத்துப்படி 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்றத்துக்கு வெளியே கட்சி விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக பல சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் வந்து உள்ளன. அவர்களை தகுதிநீக்கம் செய்ய முடியும். கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அவர்கள் மீறி உள்ளனர். 3-ல் 2 பங்கு அளவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், வேறு கட்சியில் இணையும் வரை அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story