ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்தவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றிபெற மாட்டார்கள் - சஞ்சய் ராவத் சொல்கிறார்


ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்தவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றிபெற மாட்டார்கள் - சஞ்சய் ராவத் சொல்கிறார்
x
தினத்தந்தி 28 Sept 2023 1:00 AM IST (Updated: 28 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற மாட்டார்கள் என்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற மாட்டார்கள் என்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

பயண திட்டம் ரத்து

சிவசேனா கட்சி ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியால் உடைந்தது. பின்னர் இந்த அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:- ஷிண்டே தலைமையிலான அணியை சேர்ந்த யாரும் அடுத்த தேர்தலில் வெற்றிபெற போவதில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சில வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். முன்னாள் முதல்-மந்திரி ஆதித்ய தாக்கரேவின் சமூக வலைதள பதிவுக்கு பின்னர் தான் அவர் தனது பயண திட்டத்தை ரத்து செய்தார்.

உணர்திறன்

முதல்-மந்திரி ஷிண்டே தலைமையிலான குழு தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மாநிலத்தில் உள்ள பிற பிரச்சினைகள் காரணமாக தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்ததாக கூறுகிறார்கள். முன்னாள் மந்திரி ஆத்திய தாக்கரே கூறியதற்கு பிறகு தான் அவர்களுக்கு இந்த பிரச்சினைகள் தெரியவந்ததா? இப்படி உணர்திறனை காட்டியதற்காக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் நீரில் மூழ்கிய நாக்பூருக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே என் செல்லவில்லை? இதுபோன்ற பருவம் தவறிய மழையால் விவசாயிகள் தங்கள் பயிர்களை இழக்க நேரிடும், ஆனால் ஏக்நாத் ஷிண்டே தனது சுற்றுப்பயணத்தில் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story