தாக்கரேக்கள் உள்ள இடம் தான் சிவசேனா- சஞ்சய் ராவத் கருத்து


தாக்கரேக்கள் உள்ள இடம் தான் சிவசேனா- சஞ்சய் ராவத் கருத்து
x

தாக்கரேக்கள் உள்ள இடம் தான் சிவசேனா என சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுடன் இணைந்து மராட்டியத்தில் புதிய ஆட்சியை அமைத்து உள்ளார். மேலும் ஏக்நாத் ஷிண்டேவும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சிவசேனாவில் இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், "பா.ஜனதா அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால், அவர்களுக்கு 2½ ஆண்டுகளாவது முதல்-மந்திரி பதவி கிடைத்து இருக்கும். நாங்களும் மகாவிகாஸ் கூட்டணி பரிசோதனையை மேற்கொண்டு இருக்க மாட்டோம். சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற குழுவினர் தான் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளனர். இதனால் சிவசேனா பலவீனம் ஆகவில்லை. தாக்கரேக்கள் எங்கு உள்ளார்களோ அதுதான் சிவசேனா" என்றார்.

1 More update

Next Story