மினி லாரியில் 8,640 இருமல் மருந்து பாட்டில்கள் கடத்தல்- 2 பேர் கைது


மினி லாரியில் 8,640 இருமல் மருந்து பாட்டில்கள் கடத்தல்- 2 பேர் கைது
x

மினி லாரியில் 8,640 இருமல் மருந்து பாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

வெளிமாநிலத்தில் இருந்து மராட்டியத்துக்கு சட்டவிரோதமாக இருமல் மருந்து பாட்டில்கள் கடத்தப்படுவதாக போதைதடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து சோதனை போட்டனர். இதில், 60 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8 ஆயிரத்து 640 இருமல் மருந்து பாட்டில்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதனை கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். இவற்றை மும்பை மற்றும் தானே பகுதிக்கு கடத்தி செல்ல அவர்கள் முயன்றது தெரியவந்தது.

இருமல் மருந்தில் சிறிதளவு ஆல்கஹால் கலந்து இருக்கும். அதனை குறிப்பிட்ட அளவு மட்டுமே தனி நபர் பயன்படுத்த வேண்டும். அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் போதையாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

-----------


Next Story