காந்தியின் சித்தாந்தங்களை அழிக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன; சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூறுகிறார்
காந்தியின் சித்தாந்தங்களை அழிக்க சில சக்திகள் முயற்சிப்பதாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூறியுள்ளார்
தானே,
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி நேற்று தானேயில் உள்ள காந்தி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:- குடிமக்களின் உரிமையை எதிர்க்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது. சிலர் காந்தியின் சித்தாந்தங்களை அழிக்க முயற்சி செய்கின்றனர். காந்தியடிகளின் உடலை அழிக்க முடியும், ஆனால் காந்திஜியின் போதனைகளை அழிக்க முடியாது. அவரின் போதனைகள் மற்றும் சித்தாந்தங்கள் மக்கள் இதயங்களில் எப்போதும் நிலைத்திருக்கும். கிராம சுயராஜ்யத்தை பற்றி அவரது தொலைநோக்கு பார்வை மிகவும் உயர்ந்ததாகும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா மிகவும் சிக்கலானது என கூறிய அவர், அதுகுறித்து விவாதிக்க மறுத்துவிட்டார்.
Related Tags :
Next Story