மின்சார ரெயில் மீது கல்வீச்சு; 3 பயணிகள் காயம்- மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

மின்சார ரெயில் மீது கல்வீச்சு தாக்குதலில் 3 பயணிகள் காயமடைந்தனர். மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானே,
மின்சார ரெயில் மீது கல்வீச்சு தாக்குதலில் 3 பயணிகள் காயமடைந்தனர். மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பயணிகள் காயம்
மத்திய ரெயில்வே வழித்தடத்த்தில் கல்வா ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வந்தது. அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் மின்சார ரெயிலின் வாசற்படியில் பயணித்த பயணிகள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர். இது பற்றி தானே ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வலைவீச்சு
காயமடைந்த 3 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் ரெயில்வே போலீசாரின் கண்காணிப்பை அதிகரித்து ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






