பிவண்டி 12 மாடி கட்டிடத்தில் திடீர் தீ

தானே,
தானே மாவட்டம் பிவண்டியில் 12 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் 48 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 2.15 மணி அளவில் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கேபிள் வயர்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயின் காரணமாக கரும்புகை கட்டிடத்தின் மேல்மாடிகளுக்கு பரவியது. இதில் கட்டிடத்தில் இருந்த 20 பேருக்கு சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். கரும்புகையில் சிக்கி இருந்த 20 பேரை பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






