மலபார்ஹில் பகுதியில் சிசுவை வீசி சென்ற இளம்பெண் காதலனுடன் கைது
மலபார்ஹில் பகுதியில் சிசுவை வீசி சென்ற இளம்பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மலபார்ஹில் பகுதியில் சிசுவை வீசி சென்ற இளம்பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
சிசு உடல்
மும்பை மலபார்ஹில் பான்கங்கா பகுதியில் கடந்த 13-ந் தேதி குறைமாதத்தில் பிறந்த சிசு உடல் கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சிசுவை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசுவை வீசி சென்ற நபரை பிடிக்க கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் 2 பெண்களின் அடையாளம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பூஜா (வயது42) மற்றும் அவரது மகள் இஷா(22) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
3 பேர் கைது
இவர்களிடம் நடத்திய விசாரணையில், இஷாவிற்கு அதே பகுதியை சேர்ந்த விலாஸ்(22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இஷா கர்ப்பமானார். இதுபற்றி அறிந்த தாய் பூஜா கருவை கலைக்க பப்பாளி பழம் மற்றும் கருத்தடை மாத்திரைகளை கொடுத்து கலைக்க முயன்றார். இதன் காரணமாக அக்குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தது. இதனை மறைக்க தாய் பூஜா, இஷாவும் சேர்ந்து சிசுவை வீசி சென்றது தெரியவந்தது. போலீசார் இதற்கு காரணமாக இருந்த வாலிபர் விலாசை பிடித்து கைது செய்தனர்.