போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து வாலிபர் தற்கொலை - போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தவர்

போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தானே,
போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தானே வாக்ளே எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மணிஷ் (வயது24). இவர் போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போக்குவரத்து போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசாரின் கைது நடவடிக்கையால் தனது போட்டி தேர்வு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட நேரிடும் என கலக்கம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மணிஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஸ்ரீநகர் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மீது குற்றச்சாட்டு
மேலும் அங்கு இருந்த கடிதத்தை கைப்பற்றினர். இதில் கோப்ரி போக்குவரத்து போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் புஷ்பக் மற்றும் சுதாகர் ஆகிய 2 பேரின் தொந்தரவு காரணமாக தான் தற்கொலை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். இது பற்றி போலீஸ் துணை கமிஷனர் வினய் ராதோட் கூறுகையில், "குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதான வழக்குகள் கோர்ட்டில் விசாரிக்கப்படும். கோப்ரி பிரிவில் புஷ்பக் மற்றும் சுதாகர் ஆகிய போலீஸ்காரர்கள் யாரும் பணியில் இல்லை. இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்து விசாரித்து வருகிறோம்" என்றார்.






