6 மாடி கட்டிடத்தில்பயங்கர தீ; ஒருவர் பலி

மும்பை காட்கோபரில் 6 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 22 நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மும்பை,
மும்பை காட்கோபரில் 6 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 22 நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தீ விபத்து
மும்பை காட்கோபர் பகுதியில் 'விஸ்வாஸ்' என்ற 6 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பீட்சா கடை, ஆஸ்பத்திரி உள்ளது. நேற்று பிற்பகல் 2 மணி அளவில் பீட்சா கடை பகுதியில் உள்ள மீன் மீட்டர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தீ பீட்சா கடைக்கு பரவி, ஆஸ்பத்திரியையும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 22 பேர் துரித கதியில் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகே உள்ள வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.
ஒருவர் பலி
தீயை அணைத்த பிறகு பீட்சா கடையில் குரோஷி தேதியா (வயது46) என்பவர் உயிரிழந்து கிடந்தார்.
மேலும் நோயாளிகளை மீட்ட 4 போலீசார் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






