'மந்திராலயா'வுக்கு பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் - முதியவர் கைது


மந்திராலயாவுக்கு பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் - முதியவர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2023 1:00 AM IST (Updated: 9 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மந்திராலயாவுக்கு பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மந்திராலயாவுக்கு பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மிரட்டல்

மராட்டிய அரசின் தலைமை செயலகமான 'மந்திராலயா' மும்பை நரிமண் பாயிண்ட் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு சென்று விட்டனர். இரவு நேர ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்தனர். இரவு 10 மணி அளவில் மந்திராலயாவிற்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய ஆசாமி மந்திராலயாவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

முதியவர் கைது

இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு பாதுகாப்புக்காக உஷார்படுத்தப்பட்டனர். இதனால் மந்திராலயாவில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மர்ம ஆசாமி புரளியை கிளப்பியது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்த ஆசாமி காந்திவிலியை சேர்ந்த பிரகாஷ் (வயது61) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story