ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- ஷிண்டே அரசு நடவடிக்கை

ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- ஷிண்டே அரசு நடவடிக்கை
x

ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணிகளுக்கு உத்தவ் தாக்கரே அரசு விதித்த தடையை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நீக்கியுள்ளார்.

மும்பை,

ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணிகளுக்கு உத்தவ் தாக்கரே அரசு விதித்த தடையை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நீக்கியுள்ளார்.

பணிமனை சர்ச்சை

மும்பையில் கொலபா - பாந்திரா - சீப்ஸ் இடையே மெட்ரோ ரெயில்-3 திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஆரேகாலனியில் பணிமனை கட்டும் பணிகள் கடந்த தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனவுடன் ஆரேகாலனியில் பணிமனை பணிகளை தொடர தடைவிதித்தார்.

மேலும் மெட்ரோ பணிமனை ஆரேகாலனியில் இருந்து காஞ்சூர்மார்க்கிற்கு மாற்றப்பட்டது. ஆனால் சட்டசிக்கல் காரணமாக காஞ்சூர்மார்க்கில் பணிமனை வேலைகள் கடந்த 2½ ஆண்டுகளாக தொடங்கப்படவில்லை.

தடை நீக்கம்

இந்தநிலையில் ஏக்நாத்ஷிண்டேவின் புதிய அரசு மீண்டும் ஆரேகாலனியில் பணிமனை அமைக்கும் பணிகளை தொடங்க உள்ளது. இதற்காக ஆரே காலனியில் மெட்ரோ பணிமனை பணிகளை தொடர உத்தவ் தாக்கரே விதித்த தடையை நேற்று முன்தினம் ஏக்நாத்ஷிண்டே அரசு நீக்கியது.

இதன் மூலம் ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

1 More update

Next Story