170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு உள்ளது- கிரிஷ் மகாஜன் கூறுகிறார்


170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு உள்ளது- கிரிஷ் மகாஜன் கூறுகிறார்
x

170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு உள்ளது என்று கிரிஷ் மகாஜன் கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மாநிலத்தின் துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் மராட்டிய சட்டசபையில் விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு படைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் ஆட்சியை கைப்பற்ற பெரும்பான்மை எண்ணிக்கையான 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முன்னாள் மந்திரி கிரிஷ் மகாஜன் நேற்று கூறியதாவது:-

எங்களுக்கு மாநிலத்தில் 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. எப்போது பெரும்பான்மையை நிரூபிக்க அழைத்தாலும் எங்களால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மராட்டிய சட்டசபையில் பா.ஜனதாவின் பலம் 106 ஆகும். தற்போது சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்பட சுமார் 50 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

மேலும் சுயேச்சை உள்பட 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு சட்டசபையில் இருந்து கிடைக்கும் என பா.ஜனதா நம்புகிறது.


Next Story