பெண்ணை பலாத்காரம் செய்த டிரைவருக்கு 7 ஆண்டு சிறை

தானே,
நவிமும்பை நெரூல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமசங்கர் சுக்லா. இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு, அவரை வீடு புகுந்து, மிரட்டி பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ரமாசங்கரை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு தானே கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் ராமசங்கர் சுக்லா மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நீதிபதி ரச்சனா தெக்ரா உத்தரவிட்டார்.
Next Story






