பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து கல்வித்துறை ஆய்வு செய்கிறது- ஏக்நாத் ஷிண்டே பேச்சு

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து வருவதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பை,
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து வருவதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் அது மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி எச்சரித்து இருந்தது. இந்தநிலையில் மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதரவாக பேசி உள்ளார். அவர் நேற்று தானேயில் நடந்த சட்டமேல் சபை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆசிரியர்கள், அரசு உதவி பெறாத பள்ளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொடுக்க அரசு ஆதரவாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது.
வேலை மூலம் பதிலடி
சில வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடி முதலீட்டை விட கூட்டு முதலீட்டை அதிகம் விரும்புகின்றன. டாவோஸ் மாநாடு வெளிநாட்டு முதலீடு குறித்து கேள்வி எழுப்பிய மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு எங்களின் வேலை மூலம் பதிலடி கொடுப்போம். கடந்த ஆட்சியில் தொழில் முதலீடு தொடர்பாக செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன ஆகியது?.
இவ்வாறு அவர் பேசினார்.






