சிறுமியை குஜராத்திற்கு கடத்தி பலாத்காரம் செய்து படுகொலை


சிறுமியை குஜராத்திற்கு கடத்தி பலாத்காரம் செய்து படுகொலை
x
தினத்தந்தி 3 March 2023 12:15 AM IST (Updated: 3 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தலசேரியை சேர்ந்த 10 வயது சிறுமியை குஜராத்திற்கு கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். காட்டில் வீசப்பட்ட சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர்.

பால்கர்,

தலசேரியை சேர்ந்த 10 வயது சிறுமியை குஜராத்திற்கு கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். காட்டில் வீசப்பட்ட சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர்.

சிறுமி கடத்தல்

பால்கர் மாவட்டம் தலசேரி தாலுகா பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் பள்ளிக்கு சென்றாள். பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கண்டுபிடிக்க 4 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் ஆய்வு நடத்தியதில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 45 வயது நபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

பலாத்காரம் செய்து கொலை

இதையடுத்து போலீசார் அந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தலசேரியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் குஜராத் மாநில எல்லை பகுதியான சஞ்சன் என்ற இடத்திற்கு கடத்தி சென்று அங்கு வைத்து பலாத்காரம் செய்து உள்ளார்.

இது வெளியே தெரியாமல் இருப்பதற்காக சிறுமியை கொலை செய்தார். பின்னர் உடலை அங்குள்ள காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.

உடல் மீட்பு

இதனை தொடர்ந்து போலீசார் அவர் கொடுத்த தகவலின் படி காட்டில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி அறிந்த பெற்றோர் உடலை கண்டு கதறி அழுதனர். போலீசார் பக்கத்து வீட்டு நபரை கைது செய்து இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை கடத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story