பெண்ணை கொலை செய்து விட்டு வெளிநாடு தப்பியவர் சிக்கினார்


பெண்ணை கொலை செய்து விட்டு வெளிநாடு தப்பியவர் சிக்கினார்
x

பெண்ணை கொலை செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் அங்கு சிக்கிய நிலையில் போலீசார் தானே அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

தானே,

பெண்ணை கொலை செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் அங்கு சிக்கிய நிலையில் போலீசார் தானே அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க பெண் கொலை

தானே மாவட்டத்தில் வசித்து வந்தவர் மகேந்திரகுமார் தேசாய். இவரது மனைவி ஸ்வைஸ்கி(வயது 33). அமெரிக்க நாட்டை சேர்ந்தவர். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் பிரிந்து வாழும் மனைவியை கொலை செய்ய தேசாய் திட்டம் போட்டார். இதற்காக அவர் தனது நண்பரான குஜராத்தை சேர்ந்த விபுல் படேல் என்பவரின் உதவியை நாடினார். மேலும் கொலைக்காக அவருக்கு ரூ.30 லட்சம் வழங்கினார்.

இதையடுத்து விபுல் படேல், தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து ஸ்வைக்கியை ஏமாற்றி அழைத்து சென்று மும்பை- அமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மறைவான இடத்தில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்றது.

வெளிநாட்டுக்கு ஓட்டம்

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஸ்வைக்கியின் கணவரை கைது செய்தனர். கொலை செய்த விபுல் படேல் தலைமறைவாக இருந்தார்.

விசாரணையில் அவர் ஐரோப்பிய நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு 26-ந் தேதி செக் குடியரசு நாட்டில் உள்ள பிராக் நகரில் விபுல் படேல் அந்த ஊர் போலீசில் சிக்கினார். இந்த நிலையில் அவரை நாடு கடத்தும் பணிகள் நடந்து வந்தன. அந்த நடைமுறைகள் முடிந்ததை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து நேற்று தானே அழைத்து வந்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story