ரூ.1.26 கோடி நகைகள் கொள்ளை அடித்தவர் கைது


ரூ.1.26 கோடி நகைகள் கொள்ளை அடித்தவர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:16:10+05:30)

அம்பர்நாத்,

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் வீட்டில் இருந்து இம்ரான் அன்சாரி என்பவர் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள வைரகற்கள், தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், செல்போன் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்றார். இது பற்றி வர்தமான் மாவட்டம் குல்டி போலீசில் தொழில் அதிபர் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து இம்ரான் அன்சாரியை தேடிவந்தனர். அப்போது அவர் மும்பைக்கு ரெயில் ஏறி தப்பி சென்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் கல்யாண் போலீசாருக்கு அம்மாநில போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கல்யாண் ரெயில் நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது ரெயிலில் இருந்து இறங்கிய இம்ரான் அன்சாரி பாலத்தின் மேலே நடந்து சென்றதை போலீசார் கண்டனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவரது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தை சேர்ந்தவர். இதையடுத்து போலீசார் அவரை மேற்கு வங்காள மாநில போலீசாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story