ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு செல்ல ரூ.50 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு செல்ல ரூ.50 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x

ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு செல்ல ரூ.50 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் உள்ளார். அவரது முகாமில் 40-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைய ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா எம்.எல்.ஏ. உதய்சிங் ராஜ்புத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அதிருப்தி முகாமில் உள்ளவர்கள் உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்ப என்னிடம் முதலில் வற்புறுத்தினர், கெஞ்சினர். ஒரு கட்டத்தில் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அதற்கு நான் மறுத்துவிட்டேன். பின்னர் அவர்கள் என்னை போனில் அழைத்து கொண்டே இருந்தனர். இதுகுறித்து கட்சி மூத்த நிர்வாகிகளிடம் கூறினேன். அவர்கள் என்னை போனை அணைத்து வைக்குமாறு கூறினர். எனவே நான் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். இந்தநிலையில் சிலர் எனது பெட்ரோல் பங்கிற்கு ரூ.50 கோடி பணத்துடன் காரில் வந்ததாக கூறப்பட்டது. எனினும் நான் தொடர்ந்து தாக்கரே குடும்பம், சிவசேனாவுக்கு விசுவாசமாக இருப்பேன்" என்றார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மறுத்து உள்ளனர்.Next Story