போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மயங்கி விழுந்து சாவு


போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தானே போலீஸ் நிலையத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

தானே,

தானேயை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை ஆண் ஒருவர் பின்தொடர்வதாக தானே ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் பெண்ணை பின்தொடர்ந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கல்யாணை சேர்ந்த ராஜேஷ் சாபுலால் (வயது59) என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரது குடும்பத்தினரை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்து இருந்தனர். இதற்கிடையில் போலீஸ் நிலையத்தில் இருந்த ராஜேஷ் சாபுலால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில், ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உயிரிழப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story