விஷ ஊசி போட்டு தற்கொலை செய்யப்போவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பிய வாலிபர்; போலீசார் விரைந்து சென்று மீட்டனர்

விஷ ஊசி போட்டு தற்கொலை செய்யப்போவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பிய வாலிபர்; போலீசார் விரைந்து சென்று மீட்டனர்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:45 AM IST (Updated: 3 Sept 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

விஷஊசி போட்டு தற்கொலை செய்யப்போவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வாலிபர் ஒருவர் இ-மெயில் அனுப்பி இருந்தார். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டனர்.

மும்பை,

விஷஊசி போட்டு தற்கொலை செய்யப்போவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வாலிபர் ஒருவர் இ-மெயில் அனுப்பி இருந்தார். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டனர்.

இ-மெயில் தகவல்

மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இ-மெயில் ஒன்று வந்தது. இந்த மெயிலில் கடனை திருப்பி தர இயலாததால் தான் விஷஊசி போட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்த போலீசார் மெயில் வந்த ஐ.பி. முகவரி மூலம் விசாரணை நடத்தினர். இதில் இ-மெயில் விக்ரோலி கண்ணம்வார் நகர் பகுதியில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் மெயில் அனுப்பிய நபரின் புகைப்படத்தை வைத்து அப்பகுதியில் விசாரித்து வந்தனர்.

போலீசார் மீட்பு

இறுதியாக மகாத்மா புலே ஆஸ்பத்திரி எதிரே தங்கி இருந்த அபக் (வயது25) என்ற வாலிபரை கண்டுபிடித்தனர். ஆனால் அங்கு விஷஊசி மருந்து எதுவும் இல்லை. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் வங்கியில் ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருப்பதாகவும், இதனை திருப்பி கட்ட இயலாததால் தற்கொலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். போலீசாருக்கு மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட வங்கி, செய்தி சேனல் ஒன்றுக்கும் அவர் இ-மெயில் அனுப்பி இருந்தது தெரியவந்தது. போலீசார் வாலிபர் அபக்கிற்கு கவுன்சிலிங் கொடுத்தனர். பின்னர் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Next Story