வெப் சீரிஸ் நடிகைக்கு தொல்லை- வாலிபர் கைது

மும்பை,
மும்பை அந்தேரி பகுதியில் 26 வயது வெப் சீரிஸ் நடிகை கணவருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடி கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு ஒருவரிடம் இருந்து ஆபாச குறுந்தகவல்கள் வந்தன. நடிகை அந்த நபரை பிளாக் செய்தார். பின்னர் அதே நபர் இன்ஸ்டாகிராமில் நடிகைக்கு குறுந்தகவல் தொல்லை கொடுக்க தொடங்கினார். மேலும் அவர் டுவிட்டரில் அவதூறு பதிவில் நடிகை, அவரது கணவரை டேக் செய்தாா். அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகையின் செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு, குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுக்க தொடங்கினார்.
இதையடுத்து நடிகை டி.என். நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வெப் சீரிஸ் நடிகைக்கு தொல்லை கொடுத்த 35 வயது வாலிபரை கைது செய்தனர்.
Next Story






