அரசு பஸ் மீது லாரி மோதல்- 8 பள்ளி மாணவர்கள் காயம்

அரசு பஸ் மீது லாரி மோதி 8 பள்ளி மாணவர்கள் காயம் அடைந்தனர்.
தானே,
அரசு பஸ் மீது லாரி மோதி 8 பள்ளி மாணவர்கள் காயம் அடைந்தனர்.
மோதல்
பால்கர் மாவடம் வாடா மனோர் சாலையில் உள்ள சப்னே பகுதியில் இன்று காலை 7.30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல அங்குள்ள நிறுத்தத்தில் நின்றது. இந்த பஸ்சில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட மற்ற பயணிகள் உடன் இருந்தனர்.
அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென அரசு பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 8 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
டிரைவர் கைது
இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் தர்மேந்திர யாதவ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






