சிஞ்ச்பாடாவில் அரசு பஸ் மீது லாரி மோதல்: 47 மாணவ-மாணவிகள் காயம்


சிஞ்ச்பாடாவில் அரசு பஸ் மீது லாரி மோதல்: 47 மாணவ-மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 9 Sept 2023 1:30 AM IST (Updated: 9 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

சிஞ்ச்பாடாவில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 47 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர்.

வசாய்,

சிஞ்ச்பாடாவில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 47 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர்.

பஸ் மீது லாரி மோதல்

பால்கர் மாவட்டம் சிஞ்ச்பாடாவில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. இதில் அந்த பகுதியில் உள்ள 4 கிராமத்தை சேர்ந்த பல மாணவ-மாணவிகள் மற்றும் சிலர் பயணித்தனர். பஸ் புறப்பட்டு ஒரு கி.மீ. தொலைவில் உள்ள தேசாய் நாக்கா அருகே சென்றபோது வாடா நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 55 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் மாணவ-மாணவிகள் 47 பேர் ஆவர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

தகவல் அறிந்த வாடா போலீசார் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் அங்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மாணவ- மாணவிகள் உள்பட பயணிகளை மீட்டனர். இவர்களை வாடாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த சிலரை தானேயில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story